| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3465 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இப்பதிகத்திற்கு இப்பாடே உயிர்நிலையாயிருக்கும். புறம்புண்டான பற்றுக்கள் சிறிது மில்லாமையைத் தெறிவிப்பதேயன்றோ இத்திருவாய்மொழிக்கு முக்யமான ப்ரமேயம், அஃது இப்பாட்டிலுள்ளது.) 8 | இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் ! உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான் அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–8-2-8 | யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kilikaal - நான் வளர்த்து வந்த கிளிகளே! பூவைகள் காள்,Poovaikal kaal - பூவைகளே! குயில்காள்,Kuyilkaal - குயில்களே! மயில்காள்,Mayilkaal - மயில்களே! இடை இல்லை,Idai illai - (என்னிடத்தில் உங்களுக்கு) ஓர் அவகாசமில்லை, நம் உடைய மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது,Nam udaiya maamaiyum sangum nenjum onrum ozhiyattoṭṭaadhu - நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் மிச்சப்படவொட்டாதே கொண்டான்,Kondaana - கொள்ளை கொண்டவன் அடையும்,Adayum - இங்கிருந்து சென்று சேர்ந்த வைகுந்தமும்,Vaikundhamum - திருநாடும் பால் கடலும்,Paal kadalum - திருப்பாற்கடலும் அஞ்சனம் வெற்பும் அவை,Anjanam verppum avai - திருவேங்கடமலையுமாகிய அத்தலங்கள் நணிய,Naniya - அருமையற்று எளியவையே (ஆனால்) பாசங்கள்,Paasangal - புறம்புண்டானபற்றுக்கள் கடை அற,Kadai ara - ஸவாஸநமாக விட்ட பின்னை அன்றி,Vitta pinnai anri - விட்டொழிந்தால்லலது அவன்,Avan - அப்பெருமான் அவை காண் கொடான்,Avai kaan kodaan - அத்தலங்களைக் காணக் கொடான் |