| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3467 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (“நங்காய்! எது எப்படியிருந்தாலும் உனக்கு ஹிதமே கோருமவர்களான நாங்கள் சொல்லுமதை நீ கேட்கவேணுமே“ என்று தாய்மார் சொல்ல “ஆமாம், கேட்க வேண்டியது அவசியந்தான், உங்கள் வார்த்தை கேட்கைக்கு நெஞ்சுவேணுமே, அது இங்கில்லையே, அவன் பக்கல் போயிற்றே, என் செய்வேன்? என்கிறாள் தலைவி.) 10 | என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10 | என்னுடைய நல்,Ennudaiya nal - நுதல் நங்கைமீர்காள்! என் நெஞ்சு,En nenju - எனக்கு வீதேயமாயிருந்த நெஞ்சானது நின் இடையேன் அல்லேன் என்று,Nin idaiyen allaan enru - உனக்கு நான் உறுப்பாலேனல்லேன்“ என்று சொல்லி என்னை நீங்கி,Ennai neengi - என்னை விட்டகன்று, கேமியும் சங்கும் இரு கை கொண்டு,Kaemiyum sangum iru kai kondu - திருவாழி திருச்சங்குகளை இரண்டு திருக்கையிலுமேந்திக் கொண்டு ஓர் கோலம் நீலம் நல் நெடு குன்றம,Oru kolam neelam nal nedu kunRam - ஓர் அழகிய நீல மஹாபர்வதம் நெடு சூழ் பல்சுடர் நாயிற்றோடு பால் மதி ஏந்திவருவது ஒப்பான்,Nedu soozh pal sudar naayittruodu paal madhi aendhivazhththu oppaan - பரந்து சூழ்ந்த பல சுடரையுடைத்தான் ஸூர்யனோடு கூடவெளுத்த சந்திரனையும் (தன் சிகரத்திலே) தாங்கிக் கொண்டு நடந்துவருவது போன்றுள்ளவனுடைய நாள் மலர் பாதம் அடைந்தது,Naal malar paadam adainthathu - அப்போதலர்ந்த செந்தாமரை போன்ற திருவடிகளையடைந்திட்டது. இனி யான் என் செய்வது,Ini yaan en seyvadhthu - இப்படி நான் நெஞ்சிழந்த பின்பு எதைச் செய்வது? |