| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3468 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது, உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது.) 11 | பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார் ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11 | பாதம் அடைவதன் பாசத்தாலே,Paadam adainvadhane paasaththaale - திருவடியை யடைவதிலுண்டான ஆசையினால் மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு,Matra val paasangal muttra vittu - புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடேவிட்டு கோது இல் புகழ் கண்ணன் தன் அடிமேல்,Koothu il pugazh kannan than adimael - கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடி விஷயமாக. வண் குருகூர் சடகோபன் சொன்ன,Van kurukoor sadagopan sonna - உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Theethu il andhaadhi oor aayiraththul - தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,Ivaiyum oor paththu - இவை பத்தையும் இசையோடும் வல்லார் தாம்,Isaiyodum vallaar thaam - இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள் ஆதும் ஓர் தீது இலர் ஆகி,Aadhum oor theethu ilar aagi - ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி இங்கும் அங்கும்,Ingum angum - உபய விபூதியிலும் எல்லாம் அமைவார்கள்,Ellam amaivargal - எல்லாவகை நிறைவும் பெற்று விளங்குவர் |