திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3469 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3469திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அவன் ஸுகுமார்யத்தை அனுசந்தித்து பரிகை இன்றிக்கே அவனை தங்களுக்கு இஷ்ட பிராப்தி சாதனம் என்று ஐஸ்வர் யாதிகளை ஷேபிக்கிறார்.) 1
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள் சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே–8-3-1
பதவுரை Show / Hide
அங்கும் இங்கும் எங்கும்,Angum ingum engum - மேலுலகங்களிலும் இவ்வுலகத்திலும் மற்றுமெவ்வுலகங்களிலுமுள்ள
வானவர் தானவர் யாவரும்,Vaanavar thaanavar yaavarum - தேவர்கள் அசுரர்கள் முதலான யாவரும்
உன்னை இனையை என்று அறியகிலாது அலற்றி,Unnai inaiyai enru ariyagilaadhu alatri - உன்னை உள்ளபடி அறியப்பெறாது எதையோ சொல்லிக் கூப்பிட்டு
பூமகள் மண்மகள் ஆய் மகள்,Poomagal manmagal aai magal - ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி யென்னும் தேவிமார்
அங்கம் சேரும்,Angam serum - திருமேனியில் சேர்ந்திருக்கப்பெற்றார்களென்றும்.
சங்கு சக்கரம் கையவன்,Sangu sakkaram kaiyavan - திருவாழி திருச்சங்குகளைத் திருக்கையிலேந்திய பெருமான்
சரணம் என்பர்,Saranam enbar - நம்முடைய ஆபத்துக்களைப் போக்கவல்லவன் என்றும் ரக்ஷ்கத்வ மாத்ரத்தையே அநுஸந்தித்திருப்பர்கள்.