| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3470 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை நித்தித்துப் பேசினார், இப்பாட்டில் கைகல்யார்த்திகளை க்ஷேபித்துப் பேசுகிறார்.) 2 | சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2 | சரணம் ஆகிய நால்மறை நூல்களும் சாராதே,Saranam aagiya naalmarai noolgalum saaraadhe - ஐச்வர்யத்திற்குரிய உபாயங்களை விதிக்கின்ற நால்வேதங்களாகிற சாஸ்த்ரங்களை விட்டிட்டு கரணம் பல் படை பற்று அறு ஓடும் கனம் ஆழி,Karanam pal padai patru aru oodum ganam aazhi - உபகரணங்களையுடைய், பல சத்ருஸேனைகள் நிச்சேஷமாக வோடும்படி ஜ்வலிக்கின்ற திருவாழியாகிற அரணம் திண்படை ஏந்திய ஈசற்கு ஆள் ஆயே,Aranam thinpadai eendhiya eesarukku aal aaiye - க்ஷேமங்கரமான திவ்யாயுதத்தைத் தரித்துள்ள எம்பெருமானுக்கு சேஷபூதர்களாயிருந்து வைத்தே (முபுக்ஷுக்களாகியு மென்றபடி) மரணம் தோற்றம்வான் பிணிமூப்பு என்ற இவைமாய்த்தோம்,Maranam thotram vaan pini mooppu enra ivaimaaithom - இறப்பும் பிறப்பும் மஹாவியாதிகளும் கீழ்த்தனமுமான விவற்றைப் போக்கிக்கொண்ட வித்தனையொழிய வேறில்லையே. |