| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3471 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழிரண்டுபாட்டுக்களிலே தமக்கு ஒருவரும் துணையில்லையென்று சொன்ன முகத்தாலே தம்முடைய தனிமையை வெளியிட்டாராயிற்று. இப்படி தம்முடைய தனிமையைச் சொன்ன ப்ரஸங்கத்தாலே அவனுடைய தனிமையை நினைத்து வருத்துகிறாரிப்பட்டால்.) 3 | ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன் நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3 | ஆளும் ஆளார்,Aalum aalaar - (கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை. ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்,Aaziyum sangum sumappar thaam - திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே வாளும் வில்லும் கொண்டு,Vaalum villum kondu - நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை,Pin selvaar matru illai - பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே, தாளும் தோளும்,Thaalum tholum - திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு கைகளை ஆர தொழ காணேன்,Kaigalai aara thoza kaaneen - கையாரத் தொழுபாரையுங் காண்கின்றிலேன் (ஆதலால்) ஞாலத்து அடியேன் நாளும் நாளும் நாடுவன்,Gnaalathu adiyen naalum naalum naaduvan - இவ்விபூதியிலே அடியேன் நாள்தோறும் பின் செல்லப்பாராநின்றேன். |