| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3472 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் * வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை * என்று அஞ்சினவாறே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! நம்மைப்பற்றி நீர் அஞ்சவேண்டுமோ! நம்முடைய ஸர்வரக்ஷகத்வம்பெருமையை நீ அறியீரோ? என்று அப்பெருமையைக் காட்டிக் கொடுத்தான், (அதாவது) வடதளசாயி விருத்தாந்தத்தை நினைப்பூட்டினான், அதை யநுஸந்தித்துத் தம்முடைய தவளர்ச்சியை விண்ணப்பஞ்செய்கிறார் இதில்.) 4 | ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன் கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4 | ஓர் முற்றா உரு ஆகி,Or mutraa uru aagi - மிகச் சிறு பிராயமான வடிவையுடையையாய் ஞாலம் போனகம் பற்றி,Gnaalam ponaagam patri - ஜகத்தையெல்லாம் அமுது செய்து ஆல் பேர் இலை,Aal per ilai - ஆலினுடைய மிகச்சிறிய இலையிலே அன்னவசம் செய்யும் அம்மானே,Annavasam seyyum ammanae - கண் வளர்ந்தருளுகிற ஸ்வாமியே! கார் எழில்,Kaar ezhil - காளமேகம் போன்றழகிய உன் கோலம்,Un kolam - உனது வடிவழகை காணல் உற்று,Kaanal utrru - காணவேணு மென்றாசைப்பட்டு ஆழும்,Aazhum - அதிலே ஆழங்காற்பட்டிருக்கின்ற கொடியேற்கு,Kodiyaerku - கொடியேனாகிற எனக்கு பேர்வது ஓர் காலம்,Paervathu or kaalam - நிகழ்கிற ஒரு க்ஷணாவகாச மானது கார் இருள் ஊழி ஒத்து உளது,Kaar irul oozhi oththu ulathu - காடாந்தகாரம்மிக்க கல்பம் போலே நீள்கின்றது. |