| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3474 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய சயனத்தை நினைத்து பரிந்து பேசின ஆழ்வாரை நோக்கி “நீர் இப்படி துடிக்கக் கடவீரோ? அவன் ஸர்வரக்ஷகனன்றோ, என்று சொல்ல, அதற்கு “நிர்யஸூரிகளின் பரிவுக்கு இலக்கானவ்வன் ஸம்ஸாரத்திலே அவ்வடிவோடே வந்து உலாவாநின்றால் நானிப்படி துடிக்காமலிருக்க முடியுமோ? வேறு எம்பெருமானைத் தவிர வேறுயாரையும் ஒருநாளும் பணிந்தறியாத அமரர்களன்றோ நித்யஸூரிகள். அவர்களுடைய பணிவுக்கும் ஞானம் முதலிய குணங்களுக்கும் தாமே இலக்காயிருக்குமவர் என்றபடி.) 6 | பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின் தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6 | பணியா அமரர்,Paniya amarar - எவரையும் பணிய வேண்டாத நித்ய ஸூரிகளினுடைய பணிவும் பண்பும் தாமே ஆம்,Panivum panbum thaamae aam - பணிவுக்கும் ஞானும் முதலிய குணங்க்களுக்கும் தாமே இலக்காயிருபவரும் அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்துமவர்,Ani aar aazhiyum sangamum aendhumavar - ஆபரணமாப் பொருந்திய திருவாழி திருச்சங்குகளைத் தாங்கி நிற்பவருமான அப்பரமபுருஷ பணியா வெம் நோய் தவிர்ப்பான்,Paniya vem noyi thavirppaan - ஒருகாலும் தணியாத வெவ்விய நோய்களைத் தவிர்பதற்காக திரு ஆர் நீலம் மணி மேனியோடு,Thiru aar neelam mani maeniyodu - அழகியதாய் நீலமணி போன்றதான வடிவோடுகூட என் மனம் சூழ உலகில் வருவார்,En manam soozha ulagil varuvaar - என்மனம் பிரமிக்கும்படியாக இவ்வுலகில் வந்து உலாவுவார் |