| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3475 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (இங்கே வந்து திருவண்பரிசாரத்திலே யெழுந்தருளியிருக்க, அந்தோ! நான் உதவப்பெற்றிலேனே, இது கிடக்க, இங்ஙனே ஓரடியானுள னென்று அவனுக்கு அறவிப்பாருமில்லையேயென்று துடிக்கிறார்.) 7 | வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென் உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7 | வருவார் செல்வார்,Varuvaar selvaar - அந்தப்பக்கத்தில் நின்றும் வருபவர்களும் இந்தப்பக்கத்தில் நின்றும் போமவர்களுமான மனிசர்கள் வண் பரிபாசுரத்து இருந்த,Van paripaasuraththu iruntha - திருவண்பரிசாரத்திலெழுந்தருளிருக்கிற. என் திருவாழ் மார்வர்க்கு,En thiruvaazh maarvarkku - என்னுடைய திருமாலுக்கு உரு ஆர்சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று,Uru aar chakaram sangu sumanthu ingu ummodu orupaadu uzhalvaan oru adiyaanum ulan endru - வடிவழகார்ந்த திருவாழி திருச்சங்குகளைச் சுமந்து கொண்டு இங்கு உம்மோடு ஒரு பக்கத்திலிருந்து கொண்டு திரியுமடியானொருவனிருக்கின்றானென்று. என் திறம் சொல்லார்,En thiram sollaar - என்னைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுகின்றிலர் செய்வது என்,Seivathu en - (இதற்கு) நான் செய்யக் கூடியது என்னோ? |