| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3476 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன் திருவடிக்கு கீழ் என்னை நிலையாளாக கொள்வது என்று -என்று எம்பெருமானை ஆழ்வார் கேட்க்கிறார்.) 8 | என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான் குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8 | ஏழ் குன்று,Ezhu kunru - குலபர்வதங்களேழையும் எழ் பார்,Ezhu paar - தீவுகளேழையும் சூழ்,Soozh - சூழ்ந்த கடல்,Kadal - ஸமுத்ரங்களையும் ஏழ் ஞாலமும்,Ezhu gnaalamum - ஏழுலகங்களையும் முழு,Muzhu - முழுக்க நின்றே தாவிய,Nindre thaaviya - நின்ற நிலையிலே நின்று ஆக்கிரமித்துக்கொண்ட நீள் கழல்,Neel kazhal - நெடிய திருவடிகளை யுடையையாய் ஆழி,Aazhi - திருவாழியையுமுடையையான திருமாலே,Thirumaale - திருமகள் கொழுநனே! என்னை,Ennai - அடியேனை கோலம் திருந்து அடி கீழ்,Kolam thirundhu adi keezh - தேவரீருடைய அழகு விஞ்சின திருவடிகளின் கீழே நின்றே ஆள் செய்ய,Nindre aal seiyya - நிலைநின்று அடிமை செய்வேனாம்படி நீ கொண்டருள நினைப்பது தான் என்றே,Nee kondarula ninaippathu thaan endre - தேவரீர் அங்கீகரிக்கத் திருவுள்ளம்பற்றுவது என்றைக்கோ? |