| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3477 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ப்ரஹ்மாதிகள் தஷாதிகள் உண்டாய் இருக்க நீர் என் செய்ய அஞ்சுகிறீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அவர்கள் உன்னுடைய ஸுகுமாரியாதிகளை அறியார்கள் -நான் என்னுடைய ஸ்நே ஹத்தாலே கலங்கி கதறா நின்றேன் என்கிறார்.) 9 | திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென் ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9 | திருமால்,Thirumaal - திருமாலே! நான் முகன் செஞ்சடையான் என்ற இவர்கள் யார்,Naan mugan senjadaiyaan endra ivargal yaar - பிரமனென்றும் ருத்திரனென்றும் சொல்லப் படுகிறவர்களில் யார்தான் எம்பெருமான் தன்மையை,Emperumaan thanmaiyai - எம்பெருமானான வுன்னுடைய ஸௌகுமார்யாதி ஸ்வபாவத்தை அறிகீற்பார்,Arigeerpaar - அறியவல்லார்? பேசி என்,Paesi en - இது சொல்லி என்ன ப்ரயோஜனமுண்டு? ஒரு மா முதல்வா,Oru maa mudhalvaa - விலகணான பரமகாரணமானவனே! ஊழி பிரான்,Oozhi piraan - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் ஸ்வாமியானவனே! என் காதல் கலக்க,En kaadhal kalakka - என்னுடைய ப்ரேமமானது நெஞ்சைக்கலக்க என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன்,Ennai aaludai karu maa meniyan enban - என்னையடிமை கொண்ட கரியகோலத் திருவுருவனே! என்று இவ்வளவே யன்றோ நானும் சொல்ல வல்லேன். |