| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3478 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஆழ்வாருடைய அச்சத்தைப் பரிஹரிக்கைக்காக எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “நமக்கு ஸநகாதிகள் முக்தர்கள் நித்யஸூரிகள் ஆகிய விவர்கள் கிட்டிநின்று பரிகிறார்கள், அதுதவிர, நாமும் அரிய செயல்களும் செய்யவல்லோமான பின்பு நீர் நமக்கு அஞ்சும் வேண்டா காணும்“ என்றருளிச் செய்ய, ஆழ்வார் அச்சந்தீர்ந்து அத்தை யநுஸந்தித்து இனியாராகிறார்.) 10 | கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10 | கலக்கம் இல்லா நல்தவம் முனிவர்,Kalakkam illaa nalthavam munivar - ஸம்ஸாரக் கலக்கமற்ற நல்ல தபஸ்விகளான ஸனகாதிமுனிவர்களென்ன, கரை கண்டோர்,Karai kandoor - ஸம்ஸாரத்தைக் கடந்து அக்கரை சென்ற முக்தர்களென்ன, துளக்கம் இல்லா வானவர்,Thulakkam illaa vaanavar - ஒருகாலும் ஸ்வரூப விபர்ய யமடையாதவர்களான நிர்யஸூரிகளென்ன, எல்லாம்,Ellaam - ஆகய இவர்களெல்லாரும் தொழுவார்கள்,Thozhuvargal - பரிவுபூண்டு மங்களாசாஸனம் பண்ணுமவர்களாயிராநின்றார்கள், மா கடல் தன்னை,Maa kadal thannai - பெருங்கடலை மலக்கம் எய்த கடைந்தானை,Malakkam eitha kadaindhaanai - கலங்கும்படி கடைந்த பெருமானை நாம் உலக்க புகழ் கிற்பது,Naam ulakka pugazh kirpathu - அற்பரான நாம் ஒரு முடிவுகண்டு புகழ்ந்தோமாவது என் செய்வது,En seivathu - கைகூடுமதோ? உரையீர்,Uraiyeer - சொல்லுங்கோள். |