| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3479 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுடைய தனிமைக்கண்டு அஞ்சவேண்டும் நிலமான ஸம்ஸாரத்திலே பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும் நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11 | உரையா வெம்நோய் தவிர,Urayaa vemnoy thavira - வாய்கொண்டு சொல்லாவொண்ணாதபடி வெவ்விய கலக்கமாகிற நோயானது தீரும்படி அருள்,Arul - க்ருபை செய்தருளின நீள் முடியானை,Neel mudiyaanai - ஸர்வாதிக சேஷியானவனைக்குறித்து, வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன்,Varai aar maadam mannai kurukoor sadagopan - மலைபோன்ற மாடங்கள் பொருந்திய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய உரை எய் சொல்தொடை ஓர்ஆயிரத்துல் இபத்தும்,Urai ey solthodai or aayiraththul ippaththum - ஸ்ரீ ஸூக்தியாயமைந்த ஆயிரம் பாசுரங்களினுள்ளும் இப்பதிகத்தை நிரையே வல்லார்,Niraiye vallaar - அடைவுபட ஓதவல்லவர்கள் நீடு உலகத்து பிறவா,Needu ulagaththu piravaa - கடல் சூழ்ந்த மண்ணுலகில் இனியொருநாளும் பிறக்க மாட்டார்கள். |