Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3480 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3480திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (குவலயாபீட வதம் மல்ல நிரஸநம் முதலான வீரச் செயல்களைச் செய்த சீர் கொள்சிற்றாய னெழுந்தருளியிருக்குமிடமான திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப்பதி எமக்கு நிர்ப்பயமான புகலிடமென்கிறார்.) 1
வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1
வார் கடா அருவி,Vaar kada aruvi - பாய்கின்ற மதநீராகிற அருளிப் பெருக்கையடைய
யானை மா மலையின்,Yaanai maa malaiyin - குவலயாபீட யானையாகிற பெரிய மலையினுடைய
மருப்பு,Maruppu - இரண்டு தந்தங்களாகிற
இணை குவடு,Inai kuvadu - இரண்டு சிகரங்களை
இறுத்து,Iruthu - முறித்து
உருட்டி,Urutti - (யானையை) முடித்தொழித்து
ஊர் கொள் திண்பாகன் உயர் செகுத்து,Oor kol thinpaagan uyar seguthu - யானையை நடத்த வல்ல சதிருடையனான பாகனது உயிரையும் முடித்து
அரங்கில்,Arangil - அரண்மனை வாசலில்
மல்லரை கொன்று,Mallarai konru - (சாணூர முஷ்டிக) மல்லர்களையும் தொலைத்திட்டு
சூழ் பரண் மேல் போர் கடாவு அரசர் புறக்கிட,Sool paran mel poor kadavu arasar purakkida - சுற்றுமுண்டான மஞ்சத்தின் மேலே நின்ற ரணவீரர்களான அரசர்கள் முதுகு காட்டியோடும்படியாகப் பண்ணி
மாடம் மீமிசை,Maadam meemisai - மாடத்தின் மேல் நிலத்திலேயிருந்த
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
தகர்த்த,Thakartha - தொலைத்திட்ட
சீர் கொள் சிறு ஆயன்,Seer kol siru aayan - வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியிருக்குமிடமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு,Thiruchchengundrooril thiruchchiraaru - திருச்செங்குன்றூர்த்திருச் திருச்சிற்றாறென்கிற திருப்பதியானது
எங்கள் செல் சார்வு,Engal sel saarvu - எங்களுக்குச் சென்று சேரும் புகலிடமாகும்.