| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3481 | திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சமர்த்தனாய் திருச் செங்குன்றூரிலே நின்று அருளின எம்பெருமான் அல்லது எனக்கு நல்ல துணை இல்லை என்கிறார்.) 2 | எங்கள் செல் சார்வு யாமுடையமுதம் இமையவரப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன் செங்கயல்களும் தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2 | உங்கள் செல் சார்வு,Ungal sel saarvu - யாம் சென்று சேரும் புகலிடமாயும் யாமுடை அமுதம்,Yaamudai amudham - நமக்குப் பரமபோக்யனாயும் இமையவர் அப்பன்,Imayavar appan - தேவாதி தேவனாயும் என் அப்பன்,En appan - எனக்கு ஸ்வாமியாயும் பொங்கு மூ உலகும்,Pongu moo ulagam - பரந்த மூவுலகத்தையும் படைத்து அழித்து அளிக்கும்,Padaiththu azhiththu alikkum - ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து ஸம்ஹரிப்பானாயும் பொருந்தும் மூ உருவன்,Porundhum moo uruvan - மேலே சொன்ன முச்செயல்களுக்கும் பொருத்தமாக மூர்த்தித்ரயஸ்வரூபியாயும் எம் அருவன்,Em aruvan - எமக்கு உயிரானவனாயும் செம் கல் உகளும் தேம் பனை புடை சூழ்,Sem kal ukalum them panai pudai sool - செவ்விய மீன்கள் துள்ளும்படி தேன்மிக்க நீர் நிலங்கள் சூழ்ந்த திருச் செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு,Thiruchchengundroor thiruchchiraaru angu - திருச்சிற்றாரென்னும்பதியிலே அமர்கின்ற,Amarginra - அமர்ந்திருப்பவனாயு மிருக்கின்ற ஆதியான் அல்லால்,Aadhiyaan allaal - ஆதிப்பிரானல்லது என் அமர் துணைமற்று யாவர்,En amar thunaimatru yaavar - எனக்குற்ற துணை வேறுயார்? (யாருமிலர்) |