திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3482 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3482திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஸ்ரீ வராஹமாய் பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்து அருளி திருச் செங்குன்றூரில் நின்று அருளின எம்பெருமானுடைய திருவடிகள் அல்லது வேறு சரணம் எனக்கு மநோ ரதத்திலும் இல்லை என்கிறார்.) 3
என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான் முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான் தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால் நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3
பதவுரை Show / Hide
மையவர் பெருமான் என் அமர் பெருமான்,Maiyavar perumaan en amar perumaan - நித்ய ஸூரிநாதனாப் போலே என்க்குற்ற நாதனாய்
இரு நிலம் இடந்த எம்பெருமான்,Iru nilam idandha emperumaan - மாநிலத்தைப் பிரளயாபத்திலிருந்து இடந்தெடுத்த எமது நாதனாய்
முன்னை வல் வினைகள் முழுது உடன்மாள,Munnai val vinaigal muzhudhu udanmaala - அநாதியான வலிய தீவினைகளெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் மாளும்படியாக
என்னை ஆள்கின்ற எம்பெருமான்,Ennai aalkinra emperumaan - என்னை அடிமை கொண்டருளுகிற பெருமையை யுடையனாய்
தென் திசைக்கு அணி கொள்,Then dhisakku ani kol - தென் திசைக்கு அலங்காரமாகக் கொள்ளப்படுவதான
திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்ங்கரை மீபால் நின்ற,Thiruchchengundrooril thiruchchiraarangarai meepaal ninra - திருச்சிற்றாறென்னும் திருப்பதியின் மேலேப்பக்கதில்லெழுந்தருளி யிருப்பவனான
எம்பெருமான்,Emperumaan - அஸ்மத்ஸ்வாமியினுடைய
அடி அல்லால்,Adi allaal - திருவடிகளைத் தவிர்த்து
எனக்கு நினைப்பிலும் பிறிது சரண் இல்லை,Enakku ninaippilum piridhu saran illai - என்னுடைய மனோரது தசையிலும் வேறொரு புகல் இல்லை.