திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3483 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3483திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (மஹாபலியின் வலியை யடக்கியும் கடல் கடைதலாகிற அரிய பெரிய காரியத்தைச் செய்தும் அடியார்களது துன்பங்களைத் தொலைத்துத் திருச்சிற்றாற்றுப் பதியிலே நின்றருளினவனது திருவடிகளல்லது வேறெனக்கு அரணில்லை யென்கிறார்.) 4
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான் செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4
பதவுரை Show / Hide
பெரிய மூ உலகும் நிறைய,Periya moo ulagamum niraiya - இடமுடைத்தான மூவுலகும் நிறையும்படியாக
பேர் உருவம் ஆய் நிமிர்ந்த,Per uruvam aai nimirndha - பெரிய வடிவையுடையனாய்க் கொண்டு வளர்ந்த
குறிய மாண் எம்மான்,Kuriya maan emmaan - வாமனப் பிரமசாரியான என் ஸ்வாமியாய்
குரை கடல் கடைந்த,Kurai kadal kadaintha - கோஷிக்கின்ற கடலைக் கடைந்தவனாய்
கோலம் மாணிக்கம் என் அம்மான்,Kolam maanikam en ammaan - அழகிய ரத்னம் போன்ற திருவடிவை எனக்குக் காட்டித்தந்தருளின உபகாரகனாய்.
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி,Seri kulai vaazhai kamugu thengu ani - செறிந்த குலைகளையுடைய வாழை கமுகு தெங்குகளின் திரள்கள் சூழ்ந்த
திருச் செங்குன்றூ திருச்சிற்றாறு,Thiruchchengundroo thiruchchiraaru - திருச்சிற்றாற்றுத் திருப்பதியிலுள்ளவர்கள்
அறிய,Ariya - தன்னை உள்ளபடியறியும்படி
மெய்ம்மையே நின்ற,Meimmaye ninra - உண்மைப் பெருமையோடே நின்றருளாமவனான
எம்பெருமான்,Emperumaan - அஸ்மத்ஸ்வாமியினுடைய
அடி இணை அல்லது,Adi inai alladhu - திருவடியிணைகளல்லது
எனக்கு ஓர் அரண்பிறிது இல்லை,Enakku or aranpiridhu illai - எனக்கு வேறொரு ரக்ஷகமுமில்லை.