Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3484 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3484திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (மற்றும்பல திருப்பதிகளா முண்டாயிருக்க, ஆழ்வீர்! நீர் சிற்றாற்றிலே இவ்வளவு நிர்ப்பந்தம் கொள்வதேன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு மறுமொழி கூறுகின்றாரிதில்.) 5
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை,Alladhu or aranum avaniil veru illai - திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற கோவில்களில் ரக்ஷகனாயிருக்கின்றவனும் அவனிற் காட்டில் வேறுபட்ட வனல்லன்,
அது பொருள் ஆகிலும்,Adhu porul aagilum - என்கிறவதுவே உண்மைப் பொருளானாலும்
என் ஆவி,En aavi - என் உயிரானது
அவனை அல்லது அமர்ந்து அணைகில்லாது,Avanai alladhu amarnthu anaikillaadhu - அத்திருச்சிற்றாறெம்பெருமானை யொழிய வேறொருவனைப் பொருந்தி விரும்பமாட்டாது,
ஆதலால்,Aadhalaal - ஆகையினாலே
அவன் உறைகின்ற,Avan uraikinra - அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமானதும்
நல்ல நான்மறையோர்,Nalla naanmairaiyor - வைதிகோத்தமர்கள்
வேள்வியுள் மடுத்த,Veliuyul madutha - யாகத்திலிட்ட ஹவிஸ்ஸுக்களிலுண்டான
நறு புகை,Naru pugai - பரிமளம் மிக்க புகையானது
விசும்பு ஒளி மறைக்கும்,Visumbu oli maraikkum - ஆகாசத்திலுள்ள (ஸூரியன் முதலிய) சுடர்ப்பொருள்களை மறைக்கும் படியாயுள்ளதும்
நல்ல நீள மாடம்,Nalla neela maadam - விலக்ஷணமாக வோங்கின மாடங்களையுடையதுமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு,Thiruchchengundrooril thiruchchiraaru - திருச்சிற்றாற்றுப் பதியானது
எனக்கு நல் அரண்,Enakku nal aran - எனக்கு நிர்ப்பயமான புகலிடம்