Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3485 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3485திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (பரிவர்களின் மிகுதியைக் காட்டும் பாசுரமிது. இப்பாட்டுக்கு மூன்றாமடி உயிரானது, * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண் சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்பது. எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களை மனத்திலே கொண்டு “இக்குணங்களை யுடையானுக்கு என்வருகிறதோ“ என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரவருளராம், அதைக்காட்டி எம்பெருமான் ஆழ்வாரைத் தேற்றுவித்தபடியாலே அதைப் பாசுரத்திலே கூட்டி அநுஸந்தித்தாராயிற்று.) 6
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6
எனக்கு நல் அரணை,Enakku nal aranai - எனக்கு நிர்ப்பயமான புகலிடமாயும்
எனது ஆர் உயிரை,Enadhu aar uyirai - என்னுடைய ஸத்தையை நிர்வஹித்துப் போருமவனாயும்
இமையவர்தந்தை தாய் தன்னை,Imayavarthanthai thaai thannai - நித்ய ஸூரிகளுக்கும் ஸகலவித பந்துவானவனாயும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை,Thanakkum than thanmai arivu ariyaanai - ஸர்வஜ்ஞனான தனக்கும் தனது தன்மை அறியக்கூடாமலிருப்பவனாயும்
தட கடல் பள்ளி அம்மானை,Thada kadal palli ammaanai - விசாலமான கடலிலே பள்ளி கொள்பவனாயுமுள்ள ஸர்வேச்வரனை
மனம் கொள் சீர்,Manam kol seer - மனத்திலே கொண்ட பகவத் குணங்களையுடையவர்காளன
மூவாயிரவர்,Moovaayiravar - மூவாயிர மந்தணர்கள்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார்,Van sivanum ayanum thaanum oppaar - சிவனையும் பிரமனையும் திருமாலையும் மொத்தவர்களாய்க் கொண்டு
வாழ்,Vaazh - வாழுமிடமாய்
கனம் கொள் திண்மாடம்,Kanam kol thinmaadam - செறிந்து திண்ணிதான மாடங்களையுடைத்தான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற தனுள்,Thiruchchengundrooril thiruchitraara thanul - திருச்சிற்றாற்றுப் பதியிலே
கண்டேன்,Kandaen - ஸேவிக்கப்பெற்றேன்