திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3487 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3487திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (இப்படி யென்னெஞ்சிலே திகழாநிற்கிற திருச்சிற்றாற்றெம்பெருமானைப் புகழும்படியறிகின்றிலே னென்கிறார்.) 8
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச் செழு நிலைத் தேவர் நான்மறையோர் திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8
பதவுரை Show / Hide
என் சிந்தையுள் திகழ இருந்தானை,En sindhaiyul thigazha irundhaanai - என்னெஞ்சினுள்ளே விளங்கிக் கொண்டிருப்பவனும்
நால் மறார் செழு நிலம் தேவர்,Naal maraar sezhunilam dhevar - நான்கு வேதங்களையு மோதின விலக்ஷண ப்ராஹமணர்கள்
திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை யானை,Dhisai kai koopi aeththum thiruchchengundrooril thiruchchiraarangkai yaanai - திசைகள் தோறும் நின்று கைகூப்பித் துதிக்கும்படியான திருச்சிற்றாற்றுப் பதியிலுள்ளவனும்
புகர் கொள்வானவர்கள் புகல் இடம் தன்னை,Pugar kolvaanavargal pughal idam thannai - சிறந்த தேவர்களுக்கும் புகலிடமாயிருப்பவனும்
வன்கைய் அசுரர் வெம் கூற்றை,Vankaiy asurar vem kootrai - மிடுக்கரான அசுரர்களுக்கு வெவ்விய யமன் போன்றவனும்
பொருந்து மூ உலகும் படைப்போடு கெடுப்பு காப்பு அவன்,Porundhu moo ulagam padaipodu keduppu kaappu avan - தன்னோடு பொருந்திய மூவுலகத்தினுடையவும் ஸ்ருஷ்டி ப்ரளய ரக்ஷணங்களுக்குக் கடவனுமான பெருமானை
புகழும் ஆறு அறியேன்,Pugazhum aaru ariyaen - புகழும் விதம் இன்னதென்ற்று அறிகின்றிலேன்