திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3488 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3488திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (பிரமன் முதல் எறும்பளவாகவுள்ள ஸகல ஜந்துக்களினுடையவும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணுவான் திருச்சிற்றாற்றெம்பெருமானே யென்னுமிடம் அர்த்த வாதமன்று, மெய்யே யென்கிறார்.) 9
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப் பிரானவனே இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார் கூரிய விச்சை யோடு ஒழுக்கம் நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9
பதவுரை Show / Hide
கொடை பெரு புகழார்,Kodai peru pugazhaar - ஓளதாரியத்தால் மிக்க புகழையுடையராய்
இனையர்,Inaiyar - இன்னாரின்னா ரென்று ப்ரஸித்தி பெற்றவர்களாய்
தன்னானார்,Thannaanar - எம்பெருமான் றன்னோடொத்த ஜ்ஞாந சக்திகளை யுடையராயிருக்குமவர்கள்
கூரிய விச்சையோடு ஒழுக்கம் நடை பலி,Kooriya vichchaiyodu ozhukkam nadai bali - கூர்மையான ஞானமும் (அதற்கு தக்க) அனுட்டானமும் நித்ய்யாத்ரையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றிருக்குமிடமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதன்,Thiruchchengundrooril thiruchchiraaru amarnthu naadhan - திருச்சிற்றாற்றுப்பதியில்
படைப்பொடு கெடுப்பு காப்பு அவன்,Padaipodu keduppu kaappu avan - ஸ்ருஷ்டி ஸம்ஹார்ரக்ஷணங்களுக்கு நிர்வாஹகனாயிருக்குமவன்
பிரமன் பரம்பரன்,Brahman paramparan - ப்ரஹ்மஸ்வரூபியா யிருக்கிற பராத்பரன்
சிவபிரான் அவனே,Sivaabiraan avane - சிவஸ்வரூபியுமானவன்
இடை புக்கு,Idai pukku - மேற் சொன்ன இருவர்க்கு மிடையிலே ரக்ஷகனாய்ப் புகுந்து
ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே,Or uruvum ozhivu illai avane - ஒரு பதார்த்தைத்தையும் விட்டு நீங்காமல் ஸர்வாந்தர்யாமி யாயிருக்குமவன்
யாவையும் தானே,Yaavayum thaane - சேதநாசேதந விபாகமின்றிக்கே எல்லாம் தன்னதீன மாயிருக்கப் பெற்றவன்
புகழ்வு இல்லை,Pugazhvu illai - இதில் அதிசயோக்தியானது ஒன்றுமில்லை.