திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3489 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3489திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸர்வேச்வரனாயிருந்து வைத்து ஸகல ப்ராணிகளும் ஆச்ரயிக்கலாம்படி திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார்.) 10
அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10
பதவுரை Show / Hide
அமர்ந்த நாதனை,Amarnthu naadhanai - நாதனென்றால் தகும் தகுமென்னும்படியான நாதனாய்
அவர் அவர் ஆகி,Avar avar aagi - தன் பக்கலில் அர்த்திகளாக வருவாரெல்லார்க்கும் அபிமாரியாய்
அவர்க்கு அருள் அருளும் அம்மானை,Avarukku arul arulum ammaanai - அவர்கட்கு அபிஷ்டங்களை யளித்தருளும் ஸவாமியாய்
அமர்ந்த தண் பழனம்,Amarnthu than pazhanam - செறிந்து குளிர்ந்த நீர் நிலங்களையுடைய
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற் றங்கரையானை,Thiruchchengundrooril thiruchchiraar thangaraiyaanai - திருச்சிற்றாற்றுப் பதியிலெழுந்தருளியிருப்பவனுமாய்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்,Amarnthu seer moovaayiravar vedhiyar - ஸ்ரீமான்களான மூவாயிரம் பிராமணர்களுக்கு வாஸஸ்தானமாய்
அவனி தேவர் வாழ்வு,Avani dhevar vaazhvum - நிலத்தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழுமிடமான அப்பதியிலே
அமர்ந்த மானோனை,Amarnthu maanonai - பொருந்தியெழுந்தருளியிருக்கு மாச்சர்ய பூதனுமாய்
முக்கண் அம்மானை நான் முகனை,Mukkan ammaanai naan muganai - சிவனுக்கு பிரமனுக்கும் அந்தர்யாமியுமான பெருமானை
அமர்ந்தேன்,Amarnthen - கிட்டப் பெற்றேன்.