| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3491 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கண்டவளவிலே விடாயெல்லாம் தீரும்படியான தொரு தாமரைத் தடாகம் போலே நான் காணும்படி வந்தருள வேணுமென்று வேண்டுகிறார்.) 1 | மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே–8-5-1 | மாயக் கூத்தா,Maayak koothaa - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே! வாமனா,Vaamana - வாமன லேஷங்கொண்டவனே! வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - மஹாபாபியான என்கைக்கு எட்டாத க்ருஷ்ணனே! கண் கைகால் தூய செய்ய மலர்களா,Kan kaikaal thoooya seiya malargalaa - திருக்கண்களும் திருக்கைகளும் திருவடிகளும் சிவந்தலர்ந்த பூக்களாகவும் சோதி செம் வாய் முகிழதா,Sothi sem vaai mugizhathaa - அழகிய சிவந்த திருவதரம் முகுளமாகவும் சாமம் சாயல் திருமேனி தண் பாசு அடையா,Saamam saayal thirumeeni than paasam adaiyaa - சாமளமான சாயலையுடைய திருமேனி குளிர்ந்து பசுமை தங்கிய இலையாகவும் பெற்று நீள் வாசம் தாமரை தடம் போல் வருவானே,Neel vaasam thamarai thadam pool varuvaane - பெரியதாய் நறுமணம் மிக்கதான தாமரைத் தடாகம் போல் வருமவனே! ஒருநாள் காணவாராய்,Orunaal kaanavaaraai - ஒருநாளாகிலும் நான் காணும்படி வருவாயாக. |