| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3492 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (என் விடாய் கெடும்படி அழகிய மயிர் முடியுடனே வந்து தோற்றியருள வேணு மென்கிறார்.) 2 | காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம் நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2 | கரு நாயிறு உதிக்கும்,Karu naayiru udhikkum - கறுதத்தொரு ஸூர்யன் உதித்துக்கிளம்பியிருப்பதாய் மா கரு மாணிக்கம்,Maa karu maanikkam - மஹத்தான நீல ரத்னமாய் நாள் நல் மலை போல்,Naal nal malai pool - அப்போதுண்டான அழகிய மலை போலே சுடர் சோதி,Sudar sothi - பரம்புகிற சுடரையுடைத்தான தேஜஸ்ஸையுடைய முடி சேர்,Mudi seer - மயிர் முடியோடே சேர்ந்த சென்னி அம்மானே,Chinni ammaane - திருமுடியையுடைய பெருமானே! காணவாராய் என்று என்று,Kaanavaaraai endru endru - நான் காணும்படிவாராயென்று பலகலுஞ் சொல்லி கண்ணும் வாயும் துவர்ந்து,Kannum vaayum thuvandu - பார்க்கிற கண்ணும் கூப்பிடுகிற வாயும் வசையறவுலர்ந்து நாணி,Naani - வெட்கமுமடைந்து நல் நாடு,Nal naadu - இந்த நல்ல நாட்டிலே அடியேன் அலமந்தால்,Adiyaen alamandhaal - அடியேன் இப்படி தளர்ந்தால் ஒரு நாள் இரங்கி நீ காண வாராய் அந்தோ,Oru naal irangi nee kaana vaarai andho - ஒரு நாளாகிலும் நீ க்ருபை பண்ணி நான் காண வருகிறிலையே, ஐயோ. |