Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3494 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3494திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இப்பாட்டும் மேற்பாட்டும் சந்தோஷமாகச் சொல்வனபோல் தோன்றும், கீழ் மேற்பாட்டுக்களில் நிர்வேதம் காணாநிற்க, இடையில் சந்தோஷம் வந்து புக ப்ரஸக்தியில்லை, இவ்விரண்டு பாசுரங்களுங்கூட நிர்வேதமாகவே சொல்லப்படுவன. உன்னுடைய வடிவழகுவந்து என்னெஞ்சிலே நிறைந்து நலிகிறவிதம் என்னால் சொல்லப்போகிறதில்லையென்று நொந்து சொல்லுகிறபடியே யிது.) 4
தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே–8-5-4
மா நீர் வெள்ளி மலை தன் மேல்,Maa neer vellli malai than meel - ஆழ்ந்த நீரினுள்ளே கிடப்பதொரு வெள்ளி மலையின் மேலே
வண் கார் நீலம் முகில் போல,Van kaar neelam mugil pool - அழகிய கார்காலத்துக் காளமேகம் போலே
தூ நீர் கடலுள்,Thoo neer kadalul - வெளுத்த நீரையுடைய பாற்கடலில்
துயில்வானே,Thuyilvaane - திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!
எந்தாய்,Endhaai - என் ஸ்வாமியே!
தூ நீர் முகில் போல் தோன்றும்,Thoo neer mugil pool thondraum - தெளிந்த நீர் நிறைந்த மேகம் போலே விளங்குகின்ற
நின் சுடர் கொள் வடிவும்,Nin sudar kol vadivum - உன்னுடைய ஒளி பொருந்திய வடிவும்
கனி வாயும்,Kani vaayum - கனிந்த திருவதரமும்
தேன் நீர் கமலம் கண்களும்,Then neer kamalam kankalum - மது ஜலத்தையுடைய கமலம் போன்ற திருக்கண்களும்
வந்து என் சிந்தை நிறைந்த ஆ,Vandhu en sindhai niraintha aa - இங்கே வந்து என்நெஞ்சு நிறைந்திருக்கிறபடியை
சொல்ல மாட்டேன்,Sollaa maatten - இன்னதென்று சொல்லகில்லேன்.