Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3496 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3496திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! உன்னுடைய வடிவழகை நினைத்து காணவேணும் காணவேணுமென்று கூப்பிடுகிற நான் காணும்படி ஏதேனுமோரிடத்தில் நின்றும் சடக்கெனவோடிவந்து தோன்றக்கூடாதாவென்று மிகுந்த ஆர்த்திதோற்ற வருளிச் செய்கிறார்.) 6
கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6
கொண்டல் வண்ணாகுடக் கூத்தா,Kondal vannaakudak koothaa - காளமேக வண்ணனே! குடக்கூத்தாடினவனெ!
வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - அக்குடக் கூத்தைக் கண்டனபவிக்கப்பெறாத பாவியேனுக்குக் கண்ணானவனே!
கண்ணா,Kannaa - ஸ்ரீ க்ருஷ்ணனே!
என் அண்டவாணா,En andavaanaa - என்னையடிமைப் படுத்திக் கொள்ளுகைக்காகப் பரமபத நிலயனானவனே!
என்று,Endru - என்றிங்ஙனே உன்படிகளைச் சொல்லி
என்னை ஆள,Ennai aala - என்னை அடிமை கொள்ளுமாறு
கூப்பிட்டு அழைத்தக் கால்,Kooppittu azhaiththak kaal - கூவியழைத்தால்
விண் தன் மேல் தான்,Vin than meel thaan - பரமபதத்தில் நின்றோ
மண் மேல் தான்,Mann meel thaan - பூமியில் நின்றோ
விரி நீர் கடல் தான்,Viri neer kadal thaan - பரம்பின நீரையுடைய கடலில் நின்றோ
மற்று தான்,Mattru thaan - அந்தர்யாமியாயிருக்குமிடத்தில் நின்றோ,
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே,Thondanaen un kazhal kaana oru naal vandhu thondraaye - அடியேன் உன் திருவடிகளைக் காணும்படியாக ஒரு நாள் கூட வந்து தோன்ற மாட்டேனென்கிறாயே.