Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3497 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3497திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கீழ்ப்பாட்டில் * தொண்டனேன் உன் கழல் காண வொரு நாள் வந்து தோன்றாய் * என்றார், இங்கேற வந்து தோற்றுவது முடியாதென்னில், என்னை ஆங்கே யழைத்து அடிமை கொள்ளவாவது வேண்டுமென்கிறாரிப்பாட்டில்.) 7
வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7
செம் தண் கமலம்,Sem than kamalam - சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற
கண் கை கால் சிவந்த வாய்,Kan kai kaal sivandha vaay - கண்களையும் கைகளையும் கால்களையும் சிவந்த வாயையுமுயை
ஓர் கரு நாயிறு,OrKaru naayiru - ஒரு கரிய ஸூர்யன்
அந்தம் இல்லா கதர் பரப்பி,Andham illaa kathar parappi - முடிவில்லாத கிரணங்களைப் பரப்பி
அலர்ந்தது ஒக்கம் அம்மானே,Alarnthathu okkam ammaanai - பரம்பினாற்போன்ற வடிவழகையுடைய ஸ்வாமியே!
வந்து தோன்றாய் அன்றேல்,Vandhu thondraaye andrel - (கீழே விரும்பினபடி) வந்து தோன்றா விட்டாலும்
வையம் தாய உன் மலர் அடி கீழ்,Vaiyam thaaya un malar adi keezh - பூமியையளந்து கொண்ட உனது பாதாரவிந்தங்களின் கீழே
யான் முந்திவந்து நிற்ப,Yaan mundhivandu nirpa - நான் முற்பட்டு வந்து நிற்கும்படியாக
முகப்பே கூவி பணி கொள்ளாய்,Mukappe koovi pani kollai - திரு முன்பே யழைத்து அடிமை கொண்டருள வேணும்.