Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3499 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3499திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இருந்ததே குடியாக எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்து அருளுகைக்காக ஸ்ரீ மதுரையிலே வந்து திரு அவதாரம் பண்ணி அருளின ஆச்சர்ய குண கணான கிருஷ்ணன் -தன்னைக் காண ஆசைப்பட்டு நோவு படுகிற எனக்கு என் செய்து அருள நினைக்கிறானோ என்கிறார்.) 9
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே–8-5-9
மின் ஆழி படை யாய்,Min aazhi padai yaai - ஒளி பொருந்திய திருவாழியைப் படையாக வுடையவனே!
ஏறும் இரு சிறைபுள் அதுவே கொடி ஆ உயர்த்தானே,Eerum iru sirai pul adhudhe kodi aa uyarththaaney - வாஹனமானவனும் பெரிய சிறகையுடையவனுமான பெரிய திருவடியையே கொடியாக எடுத்தவனே!
இதுவோ பொருத்தம் என்று என்று,Idhuvo poruththam endru endru - இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி
ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhak kaalam - பொருமியழுதால்,
இ மா ஞாலம் பொறை தீர்ப்பான்,E maa nyaalam porai theerppaan - இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக
மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன்,Madhu vaar solai utthaa madurai pirandha maayan - தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான்
எதுவே ஆக கருதும் கொல்,Ethuve aaga karudhum kol - என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ?