| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3500 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (எம்பெருமானே! நீ அவதாரங்கள் பண்ணி ஸௌலப்யத்தைக் காட்டி நிற்கச் செய்தோம் அக்காலத்திற்குப் பிறபட்டேன், பொருள்தோறும் வியாபித்து நின்றாயாகிலும் அந்தர்யாமியைக் காண அசக்தனாயிராநின்றேன, பின்னை எங்கே காணக் கடவேனென்கிறார்.) 10 | பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ யின்னே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே–8-5-10 | பிறந்த மாயா,Pirandha maayaa - அவதாரங்களைச் செய்தருளும் மாயனே! பாரதம் பொருதமாயா,Bharatham poruthamaayaa - பாரதப்போர் புரிகையில் பல ஆச்சரியங்களைக் காட்டினவனே! நீ இன்னே,Nee innai - நீ இப்படி எளியனாயிருக்கச் செய்தே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே,Sirandha kaal thee neer vaan man piravum aaya perumaaney - சிறந்த பஞ்ச பூதங்களையும் அந்த பூதங்களில் நின்று முண்டான பதார்த்தங்களையும் சரீரமாகவுடைய ஸர்வாதிகனாய் கறந்த பாலுள் நெய்யே போல்,Karandha paalul neyyai pool - கறந்த பாலினுள்ளே நெய் போலே கண்டுகொள் இறந்து,Kandukol irandhu - கண்டுகொள்ளுதல் இல்லாதபடி. இவற்றுள் எங்கும் நின்ற பெரு மாயா,Ivatrul engum ninra peru maayaa - மேலே சொன்ன வஸ்துக்க ளெல்லாவற்றிலும் உறைகின்ற ஆச்சர்ய பூதனே! உன்னை எங்கே காண்கேன்,Unnai engge kaankaein - உன்னை எவ்விடத்திலே காணக்கடவேன்? |