திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3502 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3502திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்தருள்பவன் ஸர்வேச்வரன், அவனூர் திருக்கடித்தானம் என்கிறார்.) 1
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான் அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1
பதவுரை Show / Hide
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ,Elliyum kaalaiyum thannai ninaiththu ezha - இரவும் பகலும் உபசாரகனான தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படியாக
நல்ல அருள்கள்,Nalla arulgkal - பரம க்ருபைகளை
நமக்கே தந்து,Namakke thandhu - நமக்கே அஸாதாரணமாகச் செய்து
அருள் செய்வான்,Arul seivaan - அனுக்கிரஹம் செய்வானாய்
அல்லி அம் தண் அம் துழாய் முடி,Alli am than am thuzhaai mudi - பூந்தாரையுடைத்தாய் அழகிய குளிர்ந்த திருத்துழாயணிந்த திருமுடியை யுடையனான
அப்பன்,Appan - எம்பெருமானுடைய
ஊர்,Oor - திவ்ய தேசம் (எது வென்னில்)
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானம்,Selvargal vaazhum thirukkadiththaanam - பகவத் கைங்கர்ய ஸம்பந்தங்கள் வாழப்பெற்ற திருக்கடித்தானமாகும்.