திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3505 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3505திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை நிரந்தர வாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார்.) 4
மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான் தேசத்தமர் திருக் கடித் தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே–8-6-4
பதவுரை Show / Hide
தேசம் அமரர்,Desam amarar - தேஜஸ்விகளான நித்ய ஸூரிகளுக்கும் ப்ராப்யமாய்
வாசம் பொழில் மன்னு,Vaasam pozhil mann - பரிமளம் மிக்க பொழில்கள் சேர்ந்தான
திருக்கடித் தானத்தை,Thirukkadiththaanathai - திருக்கடித்தான மென்னும் தலத்தை
கோயில் கொண்டான் மாயப்பிரான்,Koil kondaan maayappiraan - கோயிலாகக் கொண்டவனான எம்பெருமான்
என வல் வினை மாய்ந்து அற,Ena val vinai maayndhu ara - என்னுடைய வலிய கருமங்கள் ஒழிந்து போம்படியாக
நேசத்தினால்,Nesathinaal - அன்புடனே
நெஞ்சம் நாடு குடி கொண்டான்,Nenjam naadu kudi kondaan - என்னெஞ்சாகிற நாட்டைத் தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான்