திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3506 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3506திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்பக்கவிலுண்டான ப்ர்ரேமோதியத்தாலே திருக்கடிகத்தானத் திருப்பதியோடே கூடவந்து என் ஹ்ருதயத்திலே புகுந்தருளினானென்கிறார்.) 5
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம் கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5
பதவுரை Show / Hide
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ,Koil kol deivam ellam thozha - தங்களுக்கென்று விமானங்கயுடையரான நித்ய ஸூரிகளெல்லாரும் தொழும்படியாக
வைகுந்தம் கோயில் கொண்ட,Vaikundham koil kondha - ஸ்ரீ வைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடையனாய்
குடக்கூத்த அம்மான்,Kudakkooththa ammaan - (அவதரித்த விடத்தே) குடகூத்தாடும் பெருமானைவன்
திருக்கடித் தானத்தை தன் கோயில் கொண்டான்,Thirukkadiththaanathai than koil kondaan - திருக்கடித்தானத்தை தனது கோயிலாக ஸ்வீகரித்துக் கொண்டவனாய்
அதனோடும்,Adhanodum - அது தன்னோடே
என் நெஞ்சகம் கோயில் கொண்டான்,En nenjagam koil kondaan - என்னெஞ்சையும் தனக்குக் கோயிலாகக் கொண்டான்.