திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3507 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தானத் தோடும் எம்பெருமான் தம் திருவுள்ளத்திலே புகுந்தானென்றவாறே அத் திருப்பதியானது ஆழ்வார் திருவுள்ளத்திலே அந்தர்த்தானமாகிவிட்ட தென்றும் தனியே அதிருப்பதி கிடையாதென்றும் சிலர் நினைக்கக் கூடமாதலால் அந்த நினைவு நீங்குமாறு, திருக்கடித்தானத்தை எல்லாரும் ஆச்ரயியுங்கோளென்கிறார். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்கிற ஸ்ரீ வசநபூஷண திவ்ய ஸூக்தியின்படியே எம்பெருமானுக்கு திவ்ய தேசாபிமாநமும் குறையற்றதேயன்றோ) 6 | கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6 | பதவுரை Show / Hideகூத்த அம்மான்,Kootha ammaan - மநோஹரி சேஷ்டிதங்களையுடைய ஸர்வேச்வரனாய் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த அம்மான்,Kodiyaan idhar muttrum maayththa ammaan - பாவியேனுடைய துக்கங்களை யெல்லாம் போக்கின ஸ்வாமியாய் மதுசூத அம்மான்,Madhu sooda ammaan - மதுஸூதனப் பெருமானானவன் உறை,Urai - எழுந்தருளியிருக்குமிடமாய் பூத்த பொழில்,Pooththa pozhil - பூத்த சோலைகளையுடைத்தான தண் திருக்கடித்தானத்தை,Than thirukkadiththaanathai - குளிர்ந்த திருக்கடித்தானப்பதியை ஏத்த,Aetha - துதித்த வளவிலே இடர் நில்லா,Idhar nillaa - துக்கங்கள் நிலைகுலைந்துபோம் குறிக்கொண்மின்,Kurikkonmin - இதைத்திண்ணமாக அறிமின். |