| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3513 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (நான் அர்த்தியாய்க் கூப்பிட்டழைக்க விடாயெல்லாம் தீரும்படி. தான் அர்த்தியாய் என்னெஞ்சிலே பெறாப்பேறு பெற்றானாகப் புகுந்திராநின்றானென்கிறார்.) 1 | இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன் கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1 | என்னை,Ennai - அடியனை வியந்து,Viyandhu - திருவுள்ளமுவந்து தன் பொன் அடி கீழ் இருத்தும் என்று,Than pon adi keezh iruththum endru - தன் திருவடிகளின் கீழே இருத்தியருள்வானாக வென்று அருத்தித்து எனைத்தோர் பல நாள்,Aruththiththu enai thoor pala naal - அனேக காலம் நாள்தோறும் அழைத்தேற்கு,Azhaiththaeerku - அழைத்துக் கூப்பிட்ட வென் விஷயத்தில் பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து,Poruththam udai vaamanan thaan pugundhu - ப்ராவண்யமுடையனான எம்பெருமான் தானே வந்து புகுந்து என் தன் கருத்தை உற,En than karuththai ura - என்னுடைய கருத்தைத் தானுடையனாய்க்கொண்டு கண்டு கொண்டு,Kandu kondu - என்னையே பார்த்துக்கொண்டு வீற்றிருந்தான்,Veetrirundhaan - எழுந்தருளியிரா நின்றான் |