| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3514 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலிமாண்டொழியும்படி தன்னழகாலே செய்து என்னை விஷயீகரித்தருளின பேருதவிக்கு, கஜேந்திராழ்வான் திறந்துச் செய்த உதவியும் ஒவ்வாதென்கிறார்.) 2 | இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும் திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தருந்தானருள் தான் இனி யானறியேனே–8-7-2 | எனது ஏழை நெஞ்சு ஆளும்,Enathu ezhai nenju aalum - என்னுடைய சபலமான நெஞ்சைத் தங்களிஷ்டப்படி நடத்திக் கொண்டு போகிற திருந்தாக ஓர் ஐவரை,Thirundhaaka or aivarai - துஷ்டபஞ்சேந்திரியங்களும் தேய்ந்து அறமன்னி,Theyndhu aramanni - க்ஷயித்து முடியும் படியாக என்பால் பொருந்தியிருந்து கண்டு கொண்டு இருந்தான்,Kandu kondu irundhaan - (நிதியெடுத்தவன் நிதினய்யே கண்டு கொண்டிருக்குமா போலே) என்னையே கண்டு கொண்டிருக்கின்றான். பெரு தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தான்,Peru thaal kalitrrukku arul seydha perumaan thaan - பெரிய தாளையுடைய யானைக்கு அருள் செய்து ஸர்வாதிகனானவ்வன் தரும் அருள் தான்,Tharum arul thaan - அந்த யானைக்கத் தந்த வருளை இனி யான் அறியேன்,Ini yaan ariyaen - என்பக்கல் பண்ணின வருளைக்கண்ட பின்பு அருளாக மதிக்கின்றிலேன். |