| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3517 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (“தேசந் திகழுந்தன் திருவருள் செய்தே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த்தை இதில் விவரித்தருளுகிறார்.) 5 | திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5 | திகழும் தன் திரு அருள் செய்து,Thigazhum than thiru arul seydhu - மிகப்பொலிகின்ற தன் திருவருளைப்பண்ணி உலகத்தார் புகழும் புகழ் அது தான் காட்டி தந்து,Ulagaththar pugazhum pugazh adhu thaan kaatti thandhu - லோகத்தார் இதுகண்டு புகழுகிற அப்புகழையும் பிரபலப்படுத்தி என்னுள் திகழும் மணி குன்றம்,Ennul thigazhum mani kundram - என்னுள்ளே, விளங்கரநின்றதொரு மாணிக்க மலைபோலே நின்றான், எனக்கு மற்று புகழும் புகழ் ஓர் பொருளே,Enakku matru pugazhum pugazh or porule - எனக்கு இந்நிலையொழிய வேறு விதமாக அவனைப் புகழ்வதும் ஒரு பொருளோ. |