| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3518 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) ( உலகத்தார் எம்பெருமான் பக்கலில் அபேக்ஷிப்பது இரண்டு வகைப்பட்டது, ஐச்வர்ய கைவல்யாதிகளான இதர புருஷார்த்தங்களை யபேக்ஷிப்பதென்பதொன்று, அவையொன்றும் வேண்டாதே “எமக்கு நீயே வேணும்“ என்று அவன்றன்னையே அபேக்ஷிப்பது மற்றொன்று. இவ்விதமாகவே, எம்பெருமான் உபகரித்தருளுகிறவிதமும் இரண்டுவகைப்பட்டது, சிலர்க்கு இதர புருஷார்த்தங்களைக் கொடுத்துவிடுதல், சிலர்க்குத் தன்னையே கொடுத்துவிடுதல். ஆழ்வார்க்கு அவன் உபகரிப்பது இதர புருஷார்த்தங்களையன்றே, தன்னையே யன்றோ கொடுப்பது. அது கிடைத்ததாகவன்றோ ஆழ்வாரும் களிப்பது. இப்படி, தன்னையே தமக்குத் தந்தருளினதானது, தன்னை வேறு யாரும் கொள்வாரில்லையென்பதனாலன்று, என் பக்கலுள்ள அபிநிவேசத்தாலே தந்தானென்கிறாரிப்பாட்டில்.) 6 | பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத் தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும் கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6 | கரு மாணிக்கம் குன்றத்து,Karu maanikkam kundrathu - கருமாணிக்க மலையின் மேலே தாமரை போல்,Thaamarai pool - தாமரைக்காடு அவர்ந்தாற்போன்ற திரு மார்வு கால் கண் கை செம்வாய் உந்தியான்,Thiru maarvu kaal kann kai sem vaai undhiyaan - திருமார்பு முதலிய திவ்யாவயவங்களையுடையனான பெருமான் மற்று பொருள் தன்னில்,Matru porul thannil - மற்றுள்ள புருஷார்த்தங்களிலே எனக்கும் ஓர் பொருள் சீர்க்கதரும் எல்,Enakkum or porul seerkkadharum el - எனக்கும் ஒரு புருஷார்த்தத்தைத் தந்து விட்டானாகில் பின்னை அவன்,Pinnai avan - பின்னே அவன் உயர்ந்த தன்னை ஆர்க்கு கொடுக்கும்,Thannai aarkku kodukkum - புருஷார்த்தமான தன்னை ஆருக்குக் கொடுப்பான். |