| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3520 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி தம்மிடத்திலே எம்பெருமான் நிர்ஹேதுகமாகச் செய்தருளின அருளையிட்டு நிர்ஹேதுகமாக அருள் செய்கையே அவனுக்கு இயல்பு என்று அவன்றன்படியை நிஷ்கர்ஷிக்கிறாரிப்பாட்டில்.) 8 | அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார் வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8 | மற்று அருள் அறியேன்,Matru arul ariyaen - வேறொன்றையும் உபகாரமாக நினைத்தருக்கின்றிலேன், என்னை ஆளும் பிரானார்,Ennai aalum piraanaar - என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவர் செய்வார்கட்கு,Seivaarukku - தாம் அருள் செய்ய நினைத்தவர்கட்கு வெறிதே,Verithae - நிர்ஹேதுகமாகவே உகந்து அருள் செய்வர்,Ugandhu arul seivar - திருவுள்ளமுகந்து க்ருபை பண்ணுவர் மூ உலகும் நெறி ஆ,Moo ulagum neri aa - மூவுலகங்களையும் முறைதப்பாதபடி. தம் வயிற்றில் கொண்டு,Tham vayittril kondu - தமக்குள்ளே கூடக் கொண்டு சிறியேனுடை சிந்தையுள் நின்றொழிந்தாரே,Siriyenudai sindhaiyul nindrozhandhaar - க்ஷுத்ரனான என்னெஞ்சிலே நின்று விட்டாரே. |