| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3521 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகரித்தமையைக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! ஒரு வ்யாஜமாத்ரமுமில்லாமல் எம்பெருமான் விஷயீகரிப்பனோ? ஏதேனுமொரு வ்யாஜ மிருக்குமே, அதைச் சொல்லிக்காணீர், என்று சிலர் கேட்பதாகக் கொண்டு, அவனுடைய விஷயீகாரத்தை விலக்காமையாகிற அனுமதிமாத்திரமே நான் பண்ணினது. இவ்வளவேயென்கிறாரிப்பாட்டில். “மன்னவைத்தேன் மதியாலே“ என்ற ஈற்றடி இப்பாட்டுக்கு உயிரானது. ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் ப்ரகரணத்தில் (110) “மதியால் இசைந்தோமென்னும் அநுமதீச்சைகள் இருத்துவ மென்னாத வென்னை இசைவித்த என்னிசைவினது“ என்ற சூர்ணையின் பொருள் இங்கே அறியத்தக்கது.) 9 | வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும் வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே–8-7-9 | வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும்,Vayittril kondu nindrozhandhaarum - தாயானவள் வயிற்றிலே வைத்து நோக்குமா போலே ரக்ஷகராகின்ற இந்நிலத்தரசர்களையும் யவரும்,Yavarum - அவர்களுக்கும் மேலான பிரமன் முதலானாரையும் வயிற்றில் கொண்டு நின்று,Vayittril kondu nindru - தம்முடைய ஸ்வரூபைக தேசத்திலே கொண்டு நின்று ஒரு மூ உலகும்,Oru moo ulagum - மூவுலகங்களையும் தன் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை,Than vayittril kondu nindra vannam nindra maalai - தன்னுடைய வயிற்றிலே கொண்டு அநாயாஸமாக இருக்கின்ற திருமாலை மதியாலே,Madhiyalae - அவர் தந்த அனுமதியாலே வயிற்றில் கொண்டு,Vayittril kondu - என்னுள்ளே கொண்டு மன்ன வைத்தேன்,Manna vaiththen - பேராதபடி வைத்தேன். |