| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3522 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார்.) 10 | வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால் பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10 | மொய்த்து ஏய் திரை மோது,Moiththu ey thirai modhu - செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற தண் பாற்கடலுள்,Than paarkadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை,Vaiththu ey sudar paambu anai namparanai - படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை மதியால்,Madhiyal - அனுமதியாலே எனது உள்ளத்து அகத்தே,Enathu ullaththu agaththae - என்னெஞ்சிலுள்ளே வைத்தேன்,Vaiththen - பொருந்த வைத்தேன், என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன்,Endrum eppothum eyththae ozhivaen allaen - இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன் |