| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3524 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமான் ஆழ்வாரோடு கலந்ததனால் தனக்குப் புதுக் கணித்த திவ்ய ஸௌந்தர்யத்தைக் காட்டக் கண்டு அநுபவித்து ஆனந்தம் பொங்கிப் பேசுகிற பாசுரமிது.) 1 | கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1 | கண்கள் சிவந்து பெரிய ஆய்,Kangal sivandhu periya aay - திருக்கண்கள் சிவந்தும் பெருத்துமிருப்பனவாய் வாயும் சிவந்து கனிந்து,Vaayum sivandhu kanindhu - திருவதரமும் சிவந்து பழுத்து உள்ளே,Ullae - அகவாயிலே வெண் பல் இலகு சுடர்,Ven pal ilaku sudar - வெளுத்த திருமுத்துக்களினுடைய விளங்குகிற சுடரையுடையனாய் இலகு விலகு மகர குண்டலத்தன்,Ilaku vilaku makara kundaladhan - மிக விளங்கி அசைகிற மகரகுண்டலங்களையுமுடையனாய் கொண்டல் வண்ணன்,Kondal vannan - காள மேக நிறத்தனாய் சுடர் முடியன்,Sudar mudhiyan - ஒளிமிக்க திருவபிஷேகத்தையுடையனாய் நான்கு தோளன்,Naangu tholan - திருத்தோள்கள் நான்குமுடையனாய் குனி சார்ங்கன்,Kuni saaringan - வளைந்த சார்ங்கவில்லையுடையனாய் ஒண் சங்கு கதைவாள் ஆழியான் ஒருவன்,On shangu kathival aazhiyaan oruvan - அழகிய சங்கும் கதையும் வாளும் ஆழியுமுடையனான வொருவன் அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - அடியேனுடைய உள்ளே விளங்கா நின்றான். |