| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3525 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ விலஷணனாய் இருக்கிற எம்பெருமான் -என் உள்ளே புகுந்து அருளுகை அன்றிக்கே -என் சரீரத்தின் உள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் -என்னுள்ளான்-என்ன வேண்டும் இடத்தில் -அடியேன் உள்ளான் -என்கையாலே -அடியேன் என்றும் -நான் என்றும் பர்யாயம் ) 2 | அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன் கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2 | அண்டத்து அகத்தான்,Andathu akathaan - அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் அந்த ராத்மாவாய் புறத்து உள்ளான்,Purathu ullaan - அண்டத்துக்குப் புறம்புபட்ட பதார்த்தங்களுக்கும் அந்தராத்மாவாய். இதுவே படி என்று உரைக்கல் ஆம் படியன் அல்லன்,Idhuvae padhi endru uraikkal aam padiyan allan - இதுவே ப்ரகாரமென்று சொல்லலாவதொரு ப்ரகாரத்தையுடையனல்லாதனாய் பரம்பரன்,Parambara - பராத்பரனாய் கடி நாற்றம் சேர்,Kadi naatram ser - விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த ஆலையுள்,Aalaiyul - தேனிலுள்ள இன்பம்,Inbam - சுவையினுடைய துன்பம் கழி நேர்மை,Thunbam kazhi naermai - கோதுகழிந்த ஸாரமான பாகம் போலிருக்கிற ஒடியா,Odiyaa - விச்சேத மற்று நித்யமான இன்பம் பெருமையோன்,Inbam perumaiyon - ஆனந்தமயனாய் உணர்வில் உம்பர் ஒருவன்,Unarvil umbar oruvan - அறிவு விஷயத்தில் மேற்பட்டிருப்பவனான ஒருவன் அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - பட்டிருப்பவனான ஒருவன் ஆத்மாவில் அந்தராத்மாவாயிரா நின்றான் உடல் உள்ளான்,Udal ullaan - சரீரத்தினுள்ளாமிராநின்றான். |