| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3526 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே தன் விஷயத்தில் இசை வையுமுண்டாக்கி என்னோடே கலந்து அந்தக் கலவி நிலைத்து நிற்பதற்காக, விலக்ஷணமாய்த் தனக்கு அநந்யார்ஹமான ஆத்மஸ்ரூபத்தையுங் காட்டிக்கொடுத்தருளினா னென்கிறார்.) 3 | உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3 | உணர்வில் உம்பர் ஒருவனை,Unarvil umbar oruvanai - அயர்வறும்மரர்களதி பதியை அவனது அருளால்,Avanathu arulaal - அவனுடைய க்ருபையாலே உறல் பொருட்டு,Ural porutthu - கிட்டுகைக்காக என் உணர்வின் உள்ளே,En unarvin ullae - என்னுடைய அபேக்ஷையாகிற ஞானத்துக்குள்ளே இருத்தினேன்,Iruththinaen - இருக்கச் செய்தேன் அதுவும்,Adhuvum - அந்த அபேக்ஷை நிர்ஹேதுக க்ருபையடியாக உண்டானதே உணர்வும் உயிரும் உடம்பும்,Unarvum uyirum udambum - (இப்படி என்னை இசைவித்து என்னுள்ளே புகுந்தவன்) விஷயஙகளைப் பற்றுகிற ஞானமும் பிராணனும் சரீரமும் மற்று உலப்பிலனவும்,Matru ulappilanavum - மற்று முண்டான அளவற்ற ப்ரக்ருதிவிகாரங்களும் பழுதே ஆம் உணர்வை பெற ஊர்ந்து,Pazhudhe aam unarvai peraa oorndhu - ஹேய மென்கிற உணர்வைப் பெறும்படியாக நடத்தி இறவு ஏறி,Iravu aeri - ஆத்மஸ்வரூபத்தைக் காட்டித்தருகையாகிற முடிவளவும் நடத்தி யானும் தான் ஆய் ஒழிந்தான்,Yaanum thaan aay ozhinthaan - என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்ல்லாம்படியான அளவும் காட்டித்தந்தான். |