திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3527 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3527திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இவ்வாத்மா தனக்குப் பரபோயமென்னுமிடத்தையும் காட்டித் தந்தருளின படியையருளிச் செய்கிறாரிதில்.) 4
யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4
பதவுரை Show / Hide
யாதும் யவர்க்கும் முன்னோனை,Yadhum yavarkkum munnonai - ஸகல சேதநாசேதநங்களுக்கும் காரண பூதனும்
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனி முதலை,Thaanum sivanum brahmanum aagi panaiyatha thani mudhalai - தானான தன்மையனாயும் சிவனாயும் பிரமனாயும் விஸத்ருதனானப்ரதான காரண பூதனும்.
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து,Thenum paalum kannalum amudhum aagi thiththiththu - தனக்குப் பரமபோக்ய மாய்க் கொண்டு ரஸித்து
என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை,En oonil uyiril unarvinil ninra onraai - என்னுடைய சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்துநின்ற ஆத்மாவை சரீரமாக யுடையனுமாய்
யானும் தானாய் ஒழிந்தானை,Yaanum thaan aay ozhindhaanai - நானும் தானாய்விட்டவனான எம்பெருமானை
உணர்ந்தேன்,Unarnthaan - அறிப் பெற்றேன்.