திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3529 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3529திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (யோகசாஸத்ரத்தில் ஆத்மஷ்வரூப ப்ராப்திக்கு உபாயமாகச் சொல்லப்படுகிற இந்திரிய ஜயம் முதலானவையாகிற யோகத்தாலே ப்ரக்ருதியில் நின்றும் விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை ஒருவாறு வருந்தி ஸாக்ஷாத்கரிக்கலா மென்கிறாரிதில்.) 6
நன்றாய் ஞானம் கடந்து போய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ் உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசை யற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே–8-8-6
பதவுரை Show / Hide
ஞானம் கடந்து போய்,Gyaanam kadandhu pooi - இந்திரிய கோசரமாஷயங்களை தப்பிபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,Nal indriyam ellam eerththu - கொடுமை மிக்க இந்திரயங்கமுயும் கழித்து
ஒன்று ஆய் கிடந்த அரு பெரு அதனை உலப்பு இல் பாழ் அதனை உணர்ந்து உணர்ந்து,Onru aay kidandha aru peru adhanai ulappu il paazh adhanai unarnthu unarnthu - பிரிக்கமுடியாதபடி பொருந்தியிருக்கிற அரிய பெரிய அஸங்க்யாதமான ப்ரக்ருதித்தவத்தை ஆத்மாவிற் காட்டிலும் வேறு பட்டதாக வுணர்ந்து
நன்றாய் ஆங்கு சென்று,Nandru aay aanggu senru - ஆத்ம ஸ்வரூபத்தளவுஞ் சென்று
இன்பம் துன்பங்கள் செற்று களைந்து,Inbam thunbangal setru kalaindhu - ஸுகத்துக்கங்களுக்கு அடியான புண்ய பாபங்களையும் விட்டு
பசை அற்றால்,Pasai atral - அவற்றில் ருசி வாஸகைகளும் கழியுண்டால்
அன்றே,Andrae - அன்றைக்கே
அப்போதே,Appodhe - அந்த க்ஷணத்திலேயே
வீடு,Veedu - ப்ரக்ருதிப்ராக்ருதங்களினிற்று விடு படுகையாகும்,
அதுவே வீடு வீடு ஆம்,Adhuvae veedu veedu aay - அதுவே ஆத்மாநுபவமோக்ஷமாம்.