திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3530 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3530திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இங்குச் சொன்னபடியே ஆத்மஸாக்ஷாத்காரம் பண்ணப் பாராமல் வேறு சில வழிகளில் முயன்றால் அம்முயற்சி கைகூடாதென்கிறார்.) 7
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி எதுவே தானும் பற்று இன்றி ஆதும் இலிகளா கிற்கில் அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறாது எதுவே வீடு எது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7
பதவுரை Show / Hide
அதுவே,Adhuvae - எம்பெருமானுக்கு ப்ரகாரமாகக் கீழே ப்ரஸதாவிக்கப்பட்ட அவ்வாத்மாநுபவமே
வீடு,Veedu - போக்ஷமாவது
வீடு பேறு இன்பம் தானும் அது,Veedu peru inbam thaanum adhu - மோக்ஷலாபத்தால் வரும் ஆனந்தமும் அது,
தேறி,Thaeri - இப்படியாக நிஷ்கர்ஷித்து
எதுவே தானும் பற்று இன்றி,Edhuvae thaanum pattru inri - ப்ரக்ருதிப்ராக்ருதங்களெல்லாவற்றிலும் ஸங்கமற்று
ஆதும் இலிகள் ஆகிற்கில்,Aadhum iligal aakirkkil - ருசி வாஸனைகளுமில்லாதவர்களாக ஆகப்பெற்றால்
அதுவே வீடு,Adhuvae veedu - அதுதான் மோக்ஷம்
வீடு பேறு இன்பம் தானும் அது,Veedu peru inbam thaanum adhu - மோக்ஷானந்தமும் அதுவே
தேறாது,Theradhu - இப்படி தெளியமாட்டாமல்
வீடு எதுஇன்பம் எது என்று எய்த்தார்,Veedu edhu inbam edhu endru eyththaar - மோக்ஷமாவது எது? ஆனந்தமாவது எது? என்று கலங்கியே நிற்பவர்கள்
எய்த்தார் எய்த்தாரே,Eyththaar eyththaar - என்றும் கலங்கியே கிடப்பர்களத்தனை.