Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3531 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3531திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (பெறுதற்கரிதான இந்த ஞானம் ஒருவாறு கைவந்தாலும் எம்பெருமானைப் பற்றின அந்திம ஸ்மிருதி யில்லையாகில் இந்த ஞானம் கைபுகுருகைக்குப்பட்ட க்லேசமெல்லாம் பழுதேயாகுமென்கிறார்.) 8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து,Eyththaar eyththaar eyththaar endru illaththaarum puraththaarum moiydhu - முடிந்தார் முடிந்தார் முடிந்தாரென்று கூச்சலிட்டு வீட்டிலுள்ளவர்களும் மற்றுமுள்ளவர்களும் திரண்டு
ஆங்கு அலறி முயங்க,Aangu alari muyanga - அவ்வவஸ்தையிலே அலறிக் கட்டிக்கொள்ள
தாம் போகும்போது,Thaam pogumpoathu - உத்க்ரமணமாகிறவப்போது
உன்மத்தர் போல் பித்தே ஏறி,Unmaththar poal pitthae aeri - உன்மத்தர்கள் போல். நெஞ்சு கலங்கி
அனுராகம் பொழியும் போது,Anuraagam pozhiyum poathu - அனுராகம் மிகமிகப்பெருங்குங் காலத்தில்
எம்பெரும்மானோடு ஒத்தே சென்று,Emperummaanodu oththae senru - (கலக்கமற்றுத் தெளிவுபிறந்து) எம்பெருமானிடத்தில் பொருத்தமுண்டாகி
அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில்,Angu ullam kooda koodidraagil - அப்பெருமான் பக்கலிலே நெஞ்சு ப்ரவணமாகப் பெற்றால்
நல் உறைப்பு,Nal uraiyppu - நல்லவுறுதியாம். (அந்திம ஸ்மிருதி யுண்டானால் பலனாகும் என்கை.)