| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3532 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (கீழ்ப்பாட்டில் அந்திமஸ்மிருதிவேணுமென்று சொல்லிற்று, அந்த ப்ரஸ்தாவத்தில் ஜீவாதமா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மைப் பொருள் தேறுகையாலே இப்படியுள்ள ஜீவ பர பேதத்தை யதார்த்தமாகக் கொள்ளாதே, இந்த பேதம் அபரமார்த்தம், தத்வஜ்ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்ம்மும் ஏகதத்வமேயென்று கொண்டு, நித்யஸம்ஸாரியான சேதநனையே ப்ரஹ்ம்மாகச் சொல்லுகிற மாயாவாதிகள் நினைவுக்கு வர, அவர்களின் பக்ஷத்தை ப்ரதிக்ஷேபிக்கிறார் இப்பாட்டில்.) 9 | கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால் ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவாத துவதுவே வீடைப் பண்ணி யொரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் ஓடித் திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே–8-8-9 | கூடிற்று ஆகில் நல் உறைப்பு,Koodidru aagil nal uraiyppu - ஜீவாத்ம ஸ்வரூபமும் பரமாத்ம ஸ்வரூபமும் ஒன்றாகப் பெற்றால் நல்லவாய்ப்புத்தான், கூடாமையை கூடினால்,Koodamaai koodinaal - அஸம்பாவிதமானவை ஸம்பவிக்கப் பெற்றால் அது,Adhu - அந்த ஜீவ்வஸ்துவானது ஆடல் பறவை உயர்கொடி எம்மாயன் ஆவது,Aadal paravai uyarkkodi emmaayan aavadhu - ஆடுபுட் கொடியையுடைய எம்பெருமானாக்கூடும் (இதுதான் அஸம்பாவிதமென்கை) (ஆதலால்) அதுவே,Adhuvae - ஜீவ்வஸ்து வாகவே நிற்குமத்தனை (ஜீவபரபேதம் ஒருகாலும் போகாதென்றவாறு) ஒரு பரிசே விடை பண்ணி,Oru parisai vidai pannni - தங்கள் மனம்போனவொரு விதமாகவே மோக்ஷ வஸ்துவைக் கல்பிப்பார் எதிர்வும் நிகழ்வும் கழிவும் ஆய்,Edhirvum nigazhvum kazhivum aay - முக்காலத்து முள்ளாராய் ஒடி திரியும்,Odi thiriyum - ஸம்ஸார பதவியிலேயே உழன்று கொண்டிருப்பாராய் யோகிகளும்,Yogigalum - (குத்ருஷ்டிகளான) சில மஹாநுபாவர்ளும் உளர், இல்லை அல்லர்,Ular, illai allar - இருக்கிறார்களே யொழிய இல்லாமற் போகவில்லை. (எதிர்வும் நிகழ்வும் கழிவுமாயுளர், இல்லை யல்லர் என்று அந்வயிப்பது) |