| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3533 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இப்படிப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை எனக்குக் காட்டிக் கொடுத்து, பாஹ்ய குத்ருஷ்டிமதங்களில் நான் கைகழியப் போகாதபடி என்னெஞசிலே எம்பெருமான் புகுந்திருக்கையாலே என்னுடைய ஸாம்ஸாரிக க்லேசமெல்லாம் தீரப்பெற்றேனென்று களித்துப் பேசும் பாசுரமிது.) 10 | உளரும் இல்லை அல்லராய் உளராய் யில்லை யாகியே உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார் வளரும் பிறையும் தேய்பிறையும் போலே அசைவும் ஆக்கமும் வளருஞ்சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10 | இல்லை அல்லர் ஆய் உளரும்,Illai allar aay ularum - (அடியார்களுக்கு)இல்லை யென்னாதபடி உளராயிருப்பவராய்) இல்லை ஆகியே,Illai aagiye - (மற்றையோர்க்கு) இல்லையாகியே உளராயிருப்பவராய் எம் ஒருவர் உளர்,Em oruvar ular - எம்பெருமானுளர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்,Avar vandhu en ullaththullaai uraiykinraar - அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் வளரும் பிறைப் போலே ஆக்கமும்,Valarum pirai polaai aakkamum - வளர் பிறைக்கு உள்ளது போலே வளர்ச்சியும் தேய் பிளை போல அசைவும்,Thei pilai pola asaiyum - க்ருஷ்ணபக்ஷ சந்திரனுக்கு உள்ளதுபோலே தேய்வும் உடைத்தாகி வளரும் கடரும் இருளும் போல்,Valarum kadarum irulum pola - ஸூரியனும் இருளும் போலே மாறி மாறி வரக்கூடியதான தெருளும் மருளும் மாய்த்தோம்,Therulum marulum maayththom - கழித்துக்கொள்ளப்பெற்றோம். |