| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3534 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11 | தெருளும் மருளும் மாய்த்து,Therulum marulum maayththu - ஜ்ஞாரா ஜ்ஞானங்கள் கலசிவருகிற ரீதியை யொழித்து தன்,Than - தன்னுடைய திருந்து செம்பொன் கழல் அடி கீழ்,Thirundhu sempon kazhal adi keezh - அழகிய செம்பொன்னாலான வீரக்கழணிந்த திருவடிகளின் கீழே அருளி இருத்தும்,Aruli iruththum - பரம கிருபைபண்ணி ஸ்தாபிக்கிற அம்மான் ஆம்,Ammaan aam - ஸ்வாமியாய் அயன் ஆம் சிவன் ஆம் திருமாலால்,Ayan aam sivan aam thirumaalal - பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நிர்வஹிக்கிற எம்பெருமானாலே அருளப்பட்ட,Arulappatta - மயர்வற மதிநலமருளப்பெற்ற சடகோபன்,Sadagopan - நம்மாழ்வாருடைய ஓர் ஆயிரத்துள் இ பத்தால்,Or aayiraththul i paththaal - ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக நம் அண்ணல் கருமாணிக்கம்,Nam annal karumaanikkam - கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி அருளி அடி கீழ் இருந்தும்,Aruli adi keezh irundhum - (இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை) கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன் |